"என்னை போலீசார் என்கவுண்டரில் கொல்லப் பார்க்கிறார்கள்.." பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னையில் நீதிமன்றத்தில் சரண்..!

கோவையைச் சேர்ந்த ரவுடி ஒருவன், தன் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், தற்போது திருந்தி வாழும் நிலையில், தன்னை என்கவுண்ட்டர் செய்ய போலீசார் திட்டமிடுகின்றனர் என்றும் வீடியோ வெளியிட்டுவிட்டு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கௌதம் என்ற அந்த ரவுடி மீது கோவையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கொலை தொடர்பாக போலீசார் கௌதமை கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், போலீசார் சிலரே தனக்கு போன் செய்து, உன்னை என்கவுண்ட்டர் செய்யப் போகிறார்கள் என எச்சரித்ததாக, வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி கௌதமுக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மற்றொரு வீடியோ வெளியிட்ட கௌதம், தனக்கு கை, கால்கள் நன்றாக உள்ளன என்றும் ஆனால் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகக் கூறி, போலீசார் தன்னை ஏதாவது செய்யக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
Comments