தென்கொரியாவில், ஆயிரம் நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரன்..!

தென்கொரியாவில் நாய் பண்ணை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரனிடம், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜோங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வளர்ப்பு நாய் மாயமானதாக போலீசாரிடம் புகாரளித்தார்.
நாயைத் தேடி போலீசார் அலைந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டில் குவியல் குவியலாக நாய்களின் சடலங்கள் இருப்பதை கண்டு, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரித்தபோது, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களை எடுத்துவந்து உணவளிக்காமல் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் நாய்கள், கருத்தரிக்க முடியாத வயதை அடையும்போது, பண்ணை உரிமையாளர்கள் அவற்றை கொலை செய்யும் பொறுப்பை அந்த நபரிடம் ஒப்படைத்ததாகவும், அதற்காக ஒரு நாய்க்கு 800 ரூபாய் வீதம் கொடுத்ததாகவும் விலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Comments