"கல் வீசினால் உடைவதற்கு அதிமுக கண்ணாடி இல்லை.. பெரும் சமுத்திரம்.. " - ஜெயக்குமார்..!

விருப்பப்பட்டே பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவதாகவும், இந்தியாவிலேயே சிறந்த தலைவரான ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக்கொள்வது சரியல்ல என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல் வீசினால் உடைவதற்கு அதிமுக கண்ணாடி இல்லை, பெரும் சமுத்திரம் என்றும், அதில் அந்தக்கல் காணாமல் போகும் என்றும் குறிப்பிட்டார்.
Comments