பிலிப்பைன்ஸ் அருகே இயந்திரக்கோளாறால் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்..!

பிலிப்பைன்ஸின் மின்டோரா தீவு பகுதியில் கடலில் மூழ்கிய எரிபொருள் டேங்கரில் இருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால், கடற்பரப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன
கடந்த மாதம் 28ம் தேதி, 8 லட்சம் லிட்டர் எண்ணெய்யை, டேங்கர்களில் ஏற்றி வந்த MT Princess Empress என்ற கப்பல், எந்திரக்கோளாறால் கடலில் மூழ்கியது.
அதிலிருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவால் கடற்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 36 ஆயிரம் ஹெக்டேர் கடற்பரப்பில் உள்ள பவளப்பாறைகள் உள்ளிட்டவை எண்ணெய் கசிவால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக கடல்சார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments