சுவாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல்... 12 பேர் மீது வழக்குப்பதிவு - 7 பேர் கைது!

0 1654

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுவாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில்  8 பேர் காயம் அடைந்தனர்.

சாத்தப்பாடியைச் சேர்ந்த மக்கள் கடந்த திங்களன்று புதுப்பேட்டை கடலில் தீர்த்தவாரி முடிந்து சொந்த ஊருக்கு சுவாமியை பாடல் இசைத்து நடனமாடிய படி டிராக்டரில் கொண்டு சென்றனர்.

மேலமணக்குடி பிள்ளையார் கோவில் அருகில் சினிமா பாட்டுப் பாடியபடி சென்றதால் அப்பகுதியைச் சேர்ந்த கலியன் என்பவர் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 8பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்குப் பதிந்து 7 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments