50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கித் தொங்கிய கோவை பெண் அந்தரத்தில் திக்.. திக்.. காட்சிகள்..! பாராகிளைடிங் பரிதாபங்கள்
பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது பயிற்சியாளருடன் 50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இருவரையும் வலை விரித்து மீட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
கோவையில் பாராகிளைடிங் தற்போது பிரபலமாகி வருகின்றது. பலர் பாராகிளைடிங் செல்வதற்கு பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலா கடற்கரை பகுதியில் கோயம்புத்தூர் பகுதியை சார்ந்த பவித்ரா என்ற பெண் தனது பயிற்சியாளரான உத்திராகண்ட் மாநிலத்தை சார்ந்த சந்தீப் என்பவருடன் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்
அப்போது காற்றின் திசை மாறியதால் வேறு திசை நோக்கி இழுத்துச்செல்லப்பட்ட பாராகிளைடிங் பாராஷூட் , ஊருக்குள் இருந்த 50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கியது. இதனால் பவித்ராவும் பயிற்சியாளர் சந்தீப்பும் அந்தரத்தில் தொங்கினர்
நேரம் செல்ல செல்ல அவர்கள் இருவரும் உதவி கேட்டு குரல் எழுப்பிய நிலையில் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் தொங்கிய நிலையில் தவித்தனர்
தகவல் அரிந்து விரைந்து வந்த போலீசாருடன் தீயணைப்புத்துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் களமிறங்கினர். கீழே விழுந்தால் அடிபடக்கூடாது என்பதற்காக, அந்த உயர் மின் கம்பத்தை சுற்றி கயிற்றால் கட்டி வலையை அமைத்தனர்.
இதற்க்கிடையே ஒருவர் மின் கம்பத்தை பிடித்துக் கொண்டிருக்க மற்றொருவர் காற்றில் இழுத்து செல்லப்படும் நிலை உருவானது
உடனடியாக மின் கம்பத்தில் சிக்கிய பாராகிளைடரின் கயிற்றை அறுத்து அவர்களை கீழே இறக்க முயற்சித்த போது இருவரும் மேலே இருந்து மீட்ப்புக்குழுவினர் விரித்த வலையில் சரியாக விழுந்ததால் சிறுசிறு காயங்களுடன் உயர் தப்பினர்
அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்
விபத்து குறித்து பயிற்சியாளர் சந்தீப் கூறுகையில், தங்களது பாராகிளைடர் மோட்டார் வகையை சார்ந்தது அல்ல என்றும் இது காற்றின் வேகத்திக்கு ஏற்ப கைகளால் இயக்கப்படும் பாராகிளைடிங் வகையை சார்ந்தது என்பதால் காற்றின் திசை திடீரென மாறுபட்டதால் தாங்கள் இழுத்து வரப்பட்டு மின் கம்பத்தில் சிக்கியதாக கூறியுள்ளார்.
Comments