''தற்போதைய வினைக்கு ஓரிரு மாதங்களில் எதிர்வினை இருக்கும்..'' - அண்ணாமலை..!

கூட்டணி விவகாரத்தில் யாரிடமும் தொங்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு நாளில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்..
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பை முடித்து கிளம்பிய அண்ணாமலையைச் சந்தித்த, அதிமுக அம்மா பேரவையினர், தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
Comments