யார் காலிலும் விழ மாட்டேன்... அம்மையார் ஜெயலலிதா போல முடிவுகள் உறுதியாக இருக்கும்... அண்ணாமலை அடுத்த அதிரடி..!
ஜெயலலிதா அம்மையாரின் முடிவு எப்படி இருக்குமோ , அதே போல் தான் என்னுடைய முடிவுகளும் இருக்கும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனக்கு பயமோ, யாருடைய காலிலும் விழுவதோ, தம்மிடம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் அதிமுக , திமுக கட்சிகளில் இருந்து பெரும் தலைவர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் பொழுது எப்படி அந்த கட்சியின் தலைவர் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முடிவு எடுத்தார்களோ அதே போல் நானும் ஒரு தலைவனாகவே முடிவெடுப்பேன் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் மேனேஜர் போல் அமர்ந்து இரண்டு இட்லி தோசை சாப்பிட்டு விட்டு செல்வதற்காக நான் இந்த பொறுப்பிற்கு வரவில்லை.. நான் இப்போது மூன்றாவது கியரில் மெதுவாக பயணிப்பதாகவே கருதுகிறேன், நிச்சயமாக 2026 தேர்தலுக்கு முன்பு ஐந்தாவது கியரில் செல்லும் வேகத்தில் பயணிப்பேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
Comments