''கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 1,562 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம்..'' - அமைச்சர் செந்தில் பாலாஜி..!

0 1115

தமிழ்நாட்டின் கோடைக்கால மின்சார தேவையை பூர்த்தி செய்ய 1,562 மெகாவாட் மின்சாரத்தை, மார்ச் முதல் மே வரையில் மூன்று மாதங்களுக்கு ஒரு யூனிட் 8.50 ரூபாய் விலையில் பெற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான ஆய்வுக் கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடந்தாண்டு மே மாதம் 16,750 ஆக இருந்த மின் பயன்பாடு, நடப்பாண்டில் 18,500 மெகாவாட் ஆக அதிகரிக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய, மாநில தொகுப்புகள், காற்றாலைகள், சூரிய மின் உற்பத்தி, மற்ற மாநிலங்களுடனான உபரி மின்சார பரிமாற்றம் போன்றவை மூலமாக 17,111 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெறும் நிலையில், கோடைக்கால மின் தேவைக்காக கூடுதலாக 1,562 மெகாவாட் மின்சாரம் பெற குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments