மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களை தேடும் பணி தீவிரம்..!

மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா எல்லையை ஒட்டி அமைந்துள்ள டமாலிபஸ் மாநிலத்தில், பணத்துக்காக கடத்தப்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்ததால் அங்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனை மீறி, அமெரிக்காவை சேர்ந்த 3 ஆண்களும், ஒரு பெண்ணும் காரில் மருந்து வாங்க அங்கு சென்றுள்ளனர்.
கார் மீது துப்பாக்கியால் சுட்ட கும்பல், அவர்களை வேறொரு காருக்கு மாற்றி கடத்திச் சென்றது. கடத்தல் கும்பல் தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு, FBI, 50,000 டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளது.
Comments