"பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைகளில் சேர்த்தால் குணப்படுத்த முடியும்.." - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக, நுண்துளை மூலம் மூளையின் ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தை அகற்றி பக்கவாதம் இல்லாமல் ஒரு நோயாளியை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
அந்த மருத்துவக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டுக்கள் தெரிவித்த பின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்தால் முழுமையாக குணப்படுத்திட முடியும் என்றார்.
தொடர்ந்து H3N2 வைரஸ் பரவல் குறித்து பேசிய அவர், இந்தியா முழுவதும் காய்ச்சல் பாதிப்பு பரவியுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
காய்ச்சல், சளி, இருமல் வந்தால் சுய வைத்தியம் பார்க்காமல், அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Comments