அமெரிக்கத் துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் சீன கிரேன்களில் உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்..!

0 1089

அமெரிக்கத் துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் சீன கிரேன்களில் உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் பெரும்பாலான துறைமுகங்களில் சீனாவின் ZPMC நிறுவனத்தின் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

ட்ரோஜன் ஹார்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்ட கிரேன்கள் பலவும் சென்சார்கள் மூலம் இயங்குவதால் இதன் மூலம் அமெரிக்கத் துறைமுகங்கள், அங்கு கையாளப்படும் பொருட்கள் குறித்த விபரம் சீனாவால் கண்காணிக்கப்படலாம் என அச்சம் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments