சொன்னா கேட்கணும் இல்லன்னா இப்படித்தான்.. சரமாரியா விழுந்த அடி மழை..! சீமான் தம்பிகள் செய்த சம்பவம்
போலீசாருக்கு அடங்க மறுத்து.. அத்துமீறி... நாம் தமிழர் அலுவலகத்தை நோக்கிச்சீறிபாய்ந்த ஆதிதமிழர் கட்சியினரை, மடக்கிப்பிடித்த நாம் தமிழர் தம்பிகள் தர்ம அடி கொடுத்து ஓடவிட்ட சம்பவம் சென்னை போரூரில் அரங்கேறி உள்ளது.
அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்த ஆதித்தமிழர் கட்சியினர் , போரூர் சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு புறப்படுமாறு போலீசார் அன்பாக எடுத்து கூறிய நிலையில் தாங்கள் அடங்க மாட்டோம் என்று ஆவேசமான ஆதிதமிழர் கட்சியினர் தடுக்க முயன்ற போலீசாரை தள்ளி விட்டு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை நோக்கி ஆவேசமாக ஓடினர்.
அப்போது பின்னால் ஓடிச்சென்ற போலீசார் வேண்டாம் திரும்பி போய் விடுங்கள் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத ஆதிதமிழர் கட்சியினர் சீமானை இழிவாக விமர்சித்து கோஷமிட்டபடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை நோக்கி முன்னேறினர்.
ஒரு கட்டத்தில் அடங்க மாட்டோம்.. அத்துமீறுவோம்... ஜக்கையாவின் தம்பிகள் நாங்கள்... என்று உரக்க கோஷமிட்டபடியே வேகமாக சென்றவர்கள் எதிரில் ஆக்ரோஷமாக நின்ற நாம் தமிழர் தம்பிகளை கண்டதும் கோஷம் போடுவதை தவிர்த்து பம்மினர்.
அப்போதும் போலீசார் திரும்பிச் செல்லும் படி கேட்டுக் கொண்டனர், ஆதிதமிழர் கட்சியினரோ தங்களது பராக்கிரமத்தை காட்ட முயன்றதால், ஆவேசமான நாம் தமிழர் தம்பிகள் , அவர்கள் கொண்டு வந்த கொடி கம்புகளை பறித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பிலும் கல்வீச்சிலும் ஈடுபட்டாலும், அடுத்தடுத்து விழுந்த அடி மழையால் அஞ்ச மாட்டோம் என்றவர்கள் விட்டால் போதும் என்று தலைதெறிக்க ஓடினர்
ஒத்தையாக சிக்கிய ஒருவரை தம்பிகள் புரட்டி எடுக்க, வலி தாங்காமல் தப்பி ஓடும் போது மற்றொரு தம்பியிடம் சிக்கியதால் அவரும் தனது பங்கிற்கு ஜக்கையனின் தம்பியை நெம்பி யெடுத்தார்
இரு கட்சியினரும் தாங்கள் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்த நிலையில் ஆதிதமிழர் கட்சியினர் 4 பேரும், நாம் தமிழர் கட்சியினர் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வந்தோமோ.. கொடியை பிடிச்சோமா.. கோசம் போட்டோமா.. அமைதியா கலைந்து போனோமா.. என்று இல்லாமல் சொல்பேச்சுக் கேளாமல் தறிகெட்டு ஓடிச்சென்றதால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments