எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது சிக்கல்.. கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர், பிளாஸ்டிக் பொருட்கள் பறந்ததன் காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர், பிளாஸ்டிக் பொருட்கள் பறந்ததன் காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க எடியூரப்பா சென்றபோது, கலபுர்கி அருகே அவரது ஹெலிகாப்டர் தரையிறக்கப்படவிருந்தது. அப்போது, வீசிய பலத்த காற்றால் இறங்குதளம் அருகே இருந்த பிளாஸ்டிக் பைகள் போன்ற குப்பைகள் திடீரென பறந்தததை அடுத்து தெளிவற்ற சூழல் காணப்பட்டது.
இதனை அடுத்து, தரையிறங்காமல் வானில் பறந்தபடி இருந்த அந்த ஹெலிகாப்டர், அப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்ட பின் அதே இடத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
Comments