எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதி விபத்து.. டேங்கர் வெடித்து டிரக் ஓட்டுனர் உயிரிழப்பு..!

எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதி விபத்து.. டேங்கர் வெடித்து டிரக் ஓட்டுனர் உயிரிழப்பு..!
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது.
ஃபிரடெரிக்கில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதியதில், டேங்கர் வெடித்து தீ பற்றி எரிந்தது. தீ கொளுந்து விட்டு மளமளவென எரிந்ததில் டிரக் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீ விபத்தால் அப்பகுதியில் இருந்த 6 வீடுகள் மற்றும் 5 வாகனங்கள் சேதமடைந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments