குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டு தண்ணீரை மாசுபடுத்திய மர்ம நபர்கள்..!

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டு தண்ணீரை மாசுபடுத்திய மர்ம நபர்கள்..!
புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டிக்குள் ஆமைகளை விட்டு, தண்ணீரை மாசுபடுத்திய நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிந்தசாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆமைகளை சிலர் விட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், நேரு எம்.எல்.ஏ. போலீசாருடன் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது குடிநீர் தொட்டிக்குள் 2 ஆமைகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டு, தண்ணீரை மாசுபடுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் நேரு எம்எல்ஏ சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
Comments