பிரைடு ரைஸ் வாங்கச் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை.. உடன் சென்ற நண்பர் பலத்த காயங்களுடன் சிகிச்சை..!

பிரைடு ரைஸ் வாங்கச் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை.. உடன் சென்ற நண்பர் பலத்த காயங்களுடன் சிகிச்சை..!
சென்னையை அடுத்த புழல் பகுதியில் பிரைடு ரைஸ் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
புழல் பகுதியை சேர்ந்த ரிதம் நேற்றிரவு ப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் புழல் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று ரிதமை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதனை அங்கிருந்த ரிதமின் நண்பரான விஜய் தடுக்க முயன்றபோது, அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே ரிதம் உயிரிழந்தார். இதுதொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
Comments