மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.. 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம்..!

மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.. 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம்..!
மலேசியாவில் பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
சிங்கப்பூரை ஓட்டியிருக்கும் ஜோகூர் மாகாணத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் 200க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் மழை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Comments