வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 3 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசம்

0 840

வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின.

காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாமில், மியான்மர் ராணுவத்துக்கு அஞ்சி, அந்நாட்டில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த முகாமில் நேற்று திடீரென பற்றியத் தீ, மளமளவென அங்குள்ள வீடுகளுக்கு வேகமாக பரவியது. இதனால் பல அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.

தீ விபத்தில் முகாமில் இருந்த 3 ஆயிரம் வீடுகளும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் முற்றிலும் சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், உயிரிழப்பு ஏதும் இல்லை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments