ஓடிடியில் கலக்கும் லெஜண்ட் அண்ணாச்சி..! பார்வையில் முதலிடம்..!
சரவணன் அருள் நடித்த லெஜண்ட் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது
சரவணன் அருள் நடித்த லெஜண்ட் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
பான் இந்தியா படமாக அண்ணாச்சி சரவணன் அருள் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற லெஜண்ட் படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது.
ஓடிடியில் வெளியான அன்று 5ஆவது இடத்தில் இருந்த லெஜண்ட் திரைப்படம் இரண்டே நாட்களில் அதிக பார்வைகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.
வார இறுதி நாள் என்பதால் லெஜண்ட் படத்திற்கு அதிக பார்வைகள் கிடைத்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ஓடிடி வெளியீட்டின் மூலம் கூடுதலாக பல ஆயிரம் புதிய பார்வையாளர்களை லெஜண்ட் படம் பெற்று வருவது குறிப்பிடதக்கது.
Comments