நாட்டுவெடி குடோனில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பெண் உயிரிழப்பு.. 12 பேர் படுகாயம்!

கடலூர் அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தில் நாட்டு வெடி மற்றும் வாணவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவனார்புராம் கிராமத்தில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் பணியாளர்கள் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வானவேடிக்கை பட்டாசு ஒன்று திடீரென வெடித்ததில் குடோன் முழுவதும் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இதில் குடோன் உரிமையாளர் கோசலை உயிரிழந்தார். 12 பேர் படுகாயமடைந்த நிலையில், கவலைக்கிடமாக உள்ள கோசலையின் கணவர் செல்வம் உள்ளிட்ட 5 பேர் புதுச்சேரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments