முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா.. 81 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைத்த உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையத்தில், 81 ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலமையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், பீரோ என புதுமனத் தம்பதியருக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 18 பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழ் பெயரை வைக்குமாறு மணமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Comments