எஞ்சியுள்ள 25 சதவீத திட்டங்களை திமுக அரசு விரைவில் நிறைவேற்றும் - முதலமைச்சர்

0 702

கள ஆய்வு திட்டத்தின் கீழ், தென் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மதுரைக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள், சிறு குறு தொழில் முனைவோர், வணிகர் சங்கம், விவசாய சங்கம் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், விவசாயிகள் வருமானத்தை பெருக்க அரசு தனி கொள்கையை வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

தொழில்துறையினர் உட்பட அனைத்து துறையினருடன் கலந்தாலோசித்தே பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறும் என்று கூறிய அவர், எஞ்சியுள்ள 25 சதவீத திட்டங்களை திமுக அரசு விரைவில் நிறைவேற்றும் என்றும் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments