மணிஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு : டெல்லி நீதிமன்றம்

0 951

துபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதித்தது. இந்த காவல் இன்றுடன்  நிறைவடைந்ததையடுத்து, மீண்டும் அவரின் காவலை 3 நாள்கள் நீடிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் வரும் 6ம் தேதி வரை 2 நாள்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments