லோன் ஆப்பில் ரூ.20 லட்சம் கடன் வாங்கிய மருத்துவ பிரதிநிதி திருப்பி செலுத்த முடியாததால் விபரீத முடிவு...!

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் ஆன்லைன் ஆப்பில் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாத மன உளைச்சலில் மருத்துவ பிரதிநிதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
மெடிக்கல் ரெப்-ஆக பணிபுரிந்து வந்த வினோத்குமார் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
வினோத்குமார் தனது குடும்ப தேவைக்காக Navi, Early Salary, Money view, Smart Coin போன்ற லோன் ஆப்களில் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றிருந்த நிலையில், அதனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தான் தூங்கச் செல்வதாக கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்ற வினோத்குமார், புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments