அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது..!

0 1519

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து உள்ளனர்.

ராணிப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்த புகாரில், முன்னாள் அமைச்சரின் உதவியாளராக இருந்த ரவி, தரகர்களான அனிபா மற்றும் விஜய் ஆகிய 3 பேர் வேலை வாங்கித் தருவதாக 11 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில், வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிந்து, அப்பெண் அளித்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதில், மோசடியில் ஈடுபட்டதாக தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் ஏ.எஸ்.ஓ.வாக பணிபுரிந்துவந்த ரவியையும் மற்றும் தரகர் விஜய் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments