நானும் ஜெயிலுக்குப் போறேன் என்ற திரைப்பட பாணியில் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்த ரவுடி ஜமால்..!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஒருவர் சரண் அடைந்தார்.
கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ஜமால் என்பவர் மீது புதுச்சேரி, கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கண்டமங்கலத்தில் செயல்படும் கடைகளில் மாமூல் கேட்டு ஜமால் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் ஜமால் நேற்று சரண் அடைந்தார்.
அவரது ஆதரவாளர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Comments