விடுப்பு எடுத்ததற்காக மாணவனை பிரம்பால் கடுமையாகத் தாக்கிய தனியார் பள்ளி தாளாளர்..!

0 1424

கன்னியாகுமரி அருகே அனுமதியின்றி விடுப்பு எடுத்ததற்காக 11ஆம் வகுப்பு மாணவனை தனியார் பள்ளியின் தாளாளர் கடுமையாகத் தாக்கியதில் மாணவர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தாளாளர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

மைலகோடு அன்னை தெரசா மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த அருண் ஜெயம் என்ற அந்த மாணவர், குலதெய்வ கோயில் திருவிழாவுக்கு செல்வதற்காக பள்ளியில் கடிதம் கொடுக்காமல் விடுப்பு எடுத்தார் என்று கூறப்படுகிறது.

இரண்டு நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்த அருண் ஜெயமை தாளாளர் ராபின்சன் தனது அறைக்கு அழைத்து, பிரம்பால் கடுமையாகத் தாக்கியதில் அவருக்கு கை, கால்கள் வீங்கி, உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments