காரில், 8 மணி நேரம் விட்டுச்செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. கவனக்குறைவாக செயல்பட்ட தந்தை கைது..!

0 1996
காரில், 8 மணி நேரம் விட்டுச்செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. கவனக்குறைவாக செயல்பட்ட தந்தை கைது..!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், காரில் 8 மணி நேரம் தனியாக விட்டுச்செல்லப்பட்ட குழந்தை வெப்பம் தாளாமல் உயிரிழந்தது.

ஷான் ரெளன்ஸ்வால் என்பவர் தனது 2 வயது குழந்தையை Day-care center-ல் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று, கவனக்குறைவால், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை இறக்கிவிடாமல் பணிக்கு சென்றுவிட்டு, மாலை வழக்கம்போல் குழந்தையை அழைத்து செல்ல Day-care center வந்துள்ளார்.

அவர் குழந்தையை விடவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தபோது, குழந்தையை காரிலிருந்து இறக்கிவிட மறந்துபோனது தெரியவந்துள்ளது. வெளியே வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருந்தாலும், காருக்குள் ஒரு மணி நேரத்தில், 50 டிகிரியை எட்டிவிடும் என்ற நிலையில், 8 மணி நேரம் காருக்குளிருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கவனக்குறைவாக செயல்பட்ட ரெளன்ஸ்வால் மீது கொலை வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். உடலின் வெப்பநிலை 106 டிகிரி Fahrenheit-ஐ தாண்டும்போது உயிரணுக்கள் சேதமடைந்து, உள்ளுருப்புகள் செயலிழக்க தொடங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments