கலப்பட ஆயில் தயாரிப்பில் ஈடுபட்ட 9 பேர் கைது -லாரி பறிமுதல்

0 1041

திருவள்ளூர் மாவட்டம் நல்லூரில் கலப்பட ஆயில் தயாரிப்பில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் அவலாஞ்சே இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சோதனையிட்ட போலீசார், அங்கு பெரிய டேங்குகளில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில், ஆயில் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.

அந்நிறுவனத்தின் உரிமையாளரான மும்பையைச் சேர்ந்த துளசி சிங்ராஜ் புட், நிறுவன மேலாளர்கள், ஊழியர்கள் உட்பட 9 பேரை கைது செய்து, கலப்பட ஆயில் எந்தெந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments