கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளி முழுமையாக திறப்பு

0 1385

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி இன்று முழுமையாக திறக்கப்பட்டது.

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயிலும் இப்பள்ளி மூடப்பட்ட நிலையில், 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வந்தது.

இன்று முதல் பள்ளியை முழுமையாக திறக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தைரியம் அளிக்க பெற்றோரும் உடன் வரலாம் என அறிவித்தது. அதன் படி, எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் முழுமையாக திறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments