முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி, இன்று பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரத்தை அணிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபாய் தாய் சேய் மருத்துவமனையில், இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கிராம் மதிப்பிலான தங்க மோதிரங்களை அணிவித்தார்.
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில், ”கலைஞர் நூலகம்” எனும் பெயரில் நடமாடும் நூலகத்தை தொடங்கி வைத்த அவர், 50 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
மேலும் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேராசிரியர் கா.அன்பழகன் நூற்றாண்டு நினைவு புத்தக விற்பனை மையத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Comments