வறுமையால் வாடும் பருத்திவீரன் பட நடிகர் ஒத்தக்கடை ஆறுமுகம் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவிப்பதாக வேதனை..!

0 2412

பருத்திவீரன் படத்தில் டீக்கடைக்காரராக நடித்து பிரபலமான நடிகர் ஒத்தக்கடை ஆறுமுகம், வறுமையால் வாடும் தனக்கு இயக்குநர்களும் அரசும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

தாமிரபரணி, சீமராஜா, ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்துள்ள ஒத்தக்கடை ஆறுமுகம், பட வாய்ப்புகள் இல்லாததால், கிழிந்து போன பிளக்ஸ் பேனரால் கட்டப்பட்டுள்ள வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மனைவி 100 நாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து காலத்தை போக்குவதாக வேதனை தெரிவித்துள்ள ஆறுமுகம், இரு வாரங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆபரேஷன் என்று சொன்னதும் கையில் பணம் இல்லாததால் வீட்டுக்கு வந்து விட்டதாகவும் கண்ணீருடன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments