சொத்து எழுதி தராததால் தாத்தாவை கை கால்களை உடைத்து சித்திரவதை செய்த பேரன்கள்..!

0 1105

கள்ளக்குறிச்சி அருகே, இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை எழுதி தராததால், பேரன்கள் தங்களது கை, கால்களை உடைத்து சித்ரவதை செய்வதாக வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த சடையன்-லட்சுமி தம்பதியின் மகன் இறந்துவிட்ட நிலையில் மருமகள் பெரியநாயகம், பேரன்கள் சதீஷ், தமிழரசன் ஆகியோர் நிலத்தை எழுதித்தர கேட்டு அடித்து கை, கால்களை உடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சடையன் மருத்துவமனையில் எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்றும் இதுவரை உடல்நிலை சரியாகாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கச்சிராயபாளையம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments