திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் இன்று.!

0 879

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தனது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

பின்னர், அண்ணா அறிவாலயம் சென்று திமுக தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகளை வழங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாஞ்சித் சம்பத் உள்ளிட்டோர் நேரில் வந்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி ஜாகிர் ஷா என்பவர், முதலமைச்சருக்கு பிறந்தநாள் பரிசாக ஒட்டகத்தை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments