பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தருடன் பாஜக எம்.எல்.ஏ வாக்குவாதம்..!

0 1617

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் அவமதிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர், துணை வேந்தருடன் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் அழைப்பிதழில் பெயர் இல்லாத ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலும் விழாவில் பங்கேற்றார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரமாக ராகேஷ் அகர்வால் மட்டுமே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய நிலையில், கோபமடைந்த பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் என்பவர், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்களை எதற்காக அழைத்தீர்கள் என பல்கலைக்கழக துணை வேந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் சுமார் 15 நிமிடங்கள் பட்டமளிக்கும் நிகழ்வு தடைபட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments