அமெரிக்காவில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசி வரும் கடும் பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

அமெரிக்காவின் மேற்கு மண்டலத்தில் உள்ள நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனிப்புயலால் அந்நகரத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பனிப்புயலால் அங்குள்ள தஹோ ஏரி பனிகட்டியாக உறைந்துள்ள நிலையில், நாளை வரையில் அப்பகுதியில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
Comments