இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி வழிப்பறி.. 3 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தது காவல்துறை!

0 2234

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நயினார்பாளையத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தியாகதுருகத்தில் உள்ள தனது மெக்கானிக்கல் கடைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கமாகும்.

நேற்று வழக்கம் போல் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் சின்னசேலம் - நயினார்பாளையம் சாலையில் அசோகன் சென்று கொண்டிருந்தார். அப்போது, காப்புக்காடு அருகே மறைந்திருந்த 3 பேர், அசோகனை மறித்து தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments