ரஷ்யாவுக்கு உதவினால் சீனா விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - அமெரிக்கா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவினால், சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்யாவுக்கு உதவி செய்ய வேண்டுமா என்பதை சீனாதான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சீனத்தலைவர்கள் யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீன அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது.
Comments