தன்னுடன் வர மறுத்ததால் முன்னாள் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர காதலன்..!

புதுச்சேரியில் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் காதலனை, தீப்பிழம்புகளோடு காதலி கட்டிப்பிடித்ததில் காதலன் உயிரிழந்தார்.
வாணரப்பேட்டையைச் சேர்ந்த சித்ராவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
சித்ராவின் முன்னாள் காதலனான பாலு என்பவனும் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளான். தன்னுடன் வந்துவிடுமாறு பாலு சித்ராவை அழைத்தபோது, மகள்களைக் காரணம் காட்டி அவர் செல்ல மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலு, சித்ரா மீது பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளான்.
கொழுந்துவிட்டு எரிந்த சித்ரா, பாலுவை விட்டுவிடக் கூடாது என எண்ணி, அவனை கட்டிப் பிடித்துள்ளார். இருவருமே தீயில் சிக்கி கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி பாலு உயிரிழந்த நிலையில், சித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments