ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்தியஸ்ரீ தாயார் உயிரிழப்பு..!

0 2190

சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யஸ்ரீயின் தாயாரும் காவலருமான ராமலட்சுமி புற்று நோயால் உயிரிழந்தார்.

ஆலந்தூரை சேர்ந்த சத்ய ஸ்ரீ கடந்த அக்டோபர் மாதம் தன்னை ஒருதலையாக காதலித்தவனால் கொலை செய்யப்பட்டார்.

மகள் இறந்த அதிர்ச்சியில், அவரின் தந்தை மாணிக்கம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சத்யஸ்ரீயின் தாய் ராமலட்சுமியும் மகள் இறந்த துயரில் இருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்தார்.

ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையம் குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments