புதிதாக அமைக்கப்பட்ட செப்டிக் டேங்கில் விழுந்த சிறுமி மண்மூடி உயிரிழப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே புதிதாக கட்டப்பட்டுவரும் செப்டிக் டேங்க் சரிந்து விழுந்தபோது எதிர்பாராதவிதமாக அதில் தவறி விழுந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார்.
நம்பேடு கிராமத்தை சேர்ந்த வடிவேல் தனது வீட்டின் அருகே கட்டிக் கொண்டிருந்த 10 அடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்க் திடீரென சரிந்த நிலையில், அந்த பக்கமாக நடந்து வந்த அவரது மகள் சார்மி அதில் தவறி விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிறுமி மீது மண் மூடியிருந்த நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்ததால், தீயைணப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து மண்ணை அகற்றி சிறுமியை சடலமாக மீட்டனர்.
Comments