''இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவருவது கஷ்டமாக உள்ளது..'' - அண்ணாமலை

இடைத்தேர்தலில் பணம் கொடுத்து பெறும் வெற்றி தேவைதானா? என கேள்வி எழுப்பிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஓட்டுக்கு பணம் தரும் நடைமுறைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோவை நவகரையில் விவசாயிகள், தன்னார்வலர்களுக்கான பாராட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்றார்.
பின்னர் பேட்டியளித்த அவர், இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவருவது கஷ்டமாக உள்ளதாகவும், அப்படி வந்தவர்களில் பாதிபேர் ஈரோடு கிழக்கு தேர்தலை பார்த்து திரும்பி ஓடியதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாடு அரசியலின் வளர்ச்சி பின்னோக்கி செல்வதாகவும், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
Comments