பாட்டிலில் பெட்ரோல் கேட்டு போதை ஆசாமிகள் பெட்ரோல் பங்கில் தகாராறு...!

நாமக்கல் அருகே பெட்ரோல் பங்கில் பாட்டிலில் பெட்ரோல் கேட்டு மது போதையில் ஊழியர்களைத் தாக்கிய ஒருவன், பங்க்கை கொளுத்திவிடுவேன் என மிரட்டியதுடன் போலீசாரையும் தரக்குறைவாக பேசிய காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
புதன்சந்தை பகுதியில் இயங்கி வரும் அந்த பெட்ரோல் பங்க்குக்கு போதை இளைஞர்கள் இரண்டு பேர் காலி வாட்டர் பாட்டிலுடன் சென்று பெட்ரோல் கேட்டுள்ளனர்.
ஊழியர்கள் பெட்ரோல் தர மறுத்ததால், போன் செய்து தனது கூட்டாளிகளை வரவழைத்து பங்க் ஊழியர்களை இரும்பு வாளி, இரும்பு சேர்கள் கொண்டு விரட்டி விரட்டி தாக்கினர்.
போதை இளைஞர்களில் ஒருவன், பெட்ரோல் பங்க்கை கொளுத்தி விடுவேன் என மிரட்டியதுடன், போலீசார் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என தரக்குறைவாகப் பேசினான்.
Comments