17 வயது மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு..!

விழுப்புரம் அருகே 17 வயது மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனை மறுக்கும் போலீசார், 8 தனிப்படைகள் அமைத்து குற்றஞ்சாட்டப்படுவோரை தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டியைச் சேர்ந்த 17 வயது மாணவனும், 17 வயது மாணவியும் பழகி வந்த நிலையில், நேற்றிரவு செங்கமேடு ஏரிக்கரையில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, இவர்களை நோட்டமிட்டு அங்கு வந்த 3 பேர் கொண்டக் கும்பல், சிறுவனை கத்தியால் குத்திவிட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, செல்போன் மற்றும் வெள்ளிக் கொலுசைப் பறித்துச் சென்றுள்ளது.
மயக்க நிலையில் இருந்த சிறுவனையும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியையும் மீட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மாணவியிடம் பெற்ற வாக்குமூலத்தில் அடிப்படையில், மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ள மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா, அந்த 3 பேரில் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சம்பவம் நடந்து 13 மணி நேரத்திற்குப் பிறகு இப்படியொரு அறிவிப்பை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, ஏன் தாமதமாக அறிவிக்க வேண்டும் என்று கேள்வி, எலுப்பி வருகின்றனர்
Comments