பரபரப்பான சந்தைப் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் மக்கள் அதிகம் கூடியிருந்த சந்தைப் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயமடைந்தனர்.
பலுச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள அந்த சந்தையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து குண்டு வெடித்துள்ளது.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகளும் சேதமடைந்துள்ளன.
கடந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Comments