தரமற்ற சாலை போடுவதாக கூறி பணியை நிறுத்திய பொதுமக்கள்.. சாலையை கைகளாலேயே பெயர்த்து எடுத்து வாக்குவாதம்..!

தரமற்ற சாலை போடுவதாக கூறி பணியை நிறுத்திய பொதுமக்கள்.. சாலையை கைகளாலேயே பெயர்த்து எடுத்து வாக்குவாதம்..!
சீர்காழி அருகே உள்ள கிராமம் ஒன்றில் தரமற்ற சாலை போடப்படுவதாக கூறி சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
எருக்கூர் ஊராட்சியில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தார்ச்சாலை தரமாக இல்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினர்.
அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம், தரமற்ற சாலையைப் சாலையை பெயர்த்து விட்டு புதியசாலை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
Comments