சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் சேவை இன்று தொடக்கம்.. பயண நேரம், செலவு குறையும் என எதிர்பார்ப்பு..!

சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் சேவை இன்று தொடக்கம்.. பயண நேரம், செலவு குறையும் என எதிர்பார்ப்பு..!
புதுச்சேரி - சென்னை இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. இதன்மூலம் பயண நேரம், செலவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதிய துறைமுகத்தில் சரக்கு கப்பல் இயக்குவதற்கான பணிகள், துறைமுக அமைப்பு உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டு வந்தது. வாரத்தில் 2 நாட்கள் சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Comments