கடலூர் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.26 லட்சம் பறிமுதல்.. வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை!

கடலூர் அருகே ஆவணங்கள் எதுவுமின்றி எடுத்து செல்லப்பட்ட 26 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து வந்த தனியார் பேருந்தில் வந்த நபரின் பையை சோதனையிட்டதில் 26 லட்சம் ரூபாய் இருப்பதும் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரிய வந்தது.
விசாரணையில் அவர் திருவெறும்பூரை சேர்ந்த பீர் முகமது என்றும், சென்னை மண்ணடியில் உள்ள சாதிக் என்பவரிடம் பணத்தை பெற்று கடலூர் எஸ்.என்.சாவடியில் வசிக்கும் பெண் ஒருவரிடம் கொடுக்க வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தப் பணம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments