இறுதிச்சடங்குகளுக்குப் பின் பெரியகுளம் மின்மயானத்தில் ஓ.பிஎஸ் தாயார் உடல் தகனம்..!

0 1670

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தியைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நகராட்சி மின் மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

பழனியம்மாள் மறைவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புக் கொண்டும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தாயார் மறைவு வருத்தமளிப்பதாக கூறினார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏக்கள் மகாராஜன், சரவணகுமார், கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேரில் மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments